மகன் தாக்கி தாய் உயிரிழப்பு

336 0

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசிகிலிகந்த – தெல்கொட பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணும் அவரது மகனுக்குமிடையில் காணி விவகாரம் தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது மகனால் சீமெந்து கல்லால் தாய் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தாக்குதலை மேற்கொண்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த பெண் 71 வயதுடைய, இசிகிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட 48 வயதுடைய சந்தேக நபரை இன்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment