மன்னார் மனித புதைகுழியிலிருந்த மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் தெரிவு செய்யப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனை செய்வதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 6 மனித எலும்புக்கூடுகள் அடங்கிய பொதிகள் மன்னார் நீதிவான் நீதி மன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை மன்னார் நீதிவான் நீதி மன்றத்தில் இருந்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித எலும்புக்கூடுகள் B/295 எனும் இலக்கமிடப்ப்பட்டு குறித்த ஆய்வகத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.


