தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்த போதும் தற்போது 700 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொகவந்தலாவை நகரில் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் கோரிக்கை என்னவெனில் ,1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்.தோட்ட தொழிலாளர்களை 700 ரூபாய்க்கு அடகு வைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில்,
நாம் 1000 ரூபாய் எனக் கோரவில்லை இதைத் தூண்டியது அரசியல் தலைவர்களே, இவ்வாறு கூறியவர்கள் தற்போது பாராளுமன்றத்தில் சுகபோகமாக இருக்கின்றனர்.ஆனால் நாம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்
எனக் கூறியதோடு நல்லாட்சியில் 1000ரூபாய் அடிப்படை சம்பளம் எனக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கும் இல்லை இது தான் நல்லாட்சி அரசாங்கமா எனக் கேள்வி எழுப்பினர்.


