பயணத்தை ஆரம்பித்த உத்தர தேவி ரயில் சேவை

378 0

கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை உத்தர தேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியை ஈடுபடுத்தும் அங்குராப்பண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கொழும்மபு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது

அதன்படி காலை 6.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் வண்டி புறப்பது. 

இந்நிகழ்வில் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் வண்டி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது. வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் அதில் அடங்குகின்றன. மொத்தமாக 724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கலாம்.

Leave a comment