போர்குற்றங்கள் இடம்பெறாமைக்கான திடமான சான்றுகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்!

323 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் நிலையில் இலங்கையில் போர்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதற்கான திடமான  சான்றுகளை அரசாங்கம் சமர்ப்பித்து நாட்டுக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்ப்பட்டுள்ள அபகீர்த்தியை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக தேசப்பற்றாளர் இலங்கையர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பொரளையில் கலாநிதி என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்ப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் அந்த மன்றத்தின் தலைவர் வசந்த கீர்த்திரத்ன கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

19 ஆம் சீர்த்திருத்தத்தினாலே தற்போது நாட்டில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று நாட்டில் பிலவுகள் எதுவுமின்றி சமாதானமான ஆட்சிபலத்தை உருவாக்குவதற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

Leave a comment