தந்தையை கொன்றவர்கள் யார் என மகளிடம் கூறுவேன்!

293 0

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் நேரில் இலங்கைக்கு வரும் பட்சத்தில், அவரது தந்தையை கொன்றவர்கள் யார் என தன்னால் கூற முடியும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

லசந்தவை படுகொலை செய்தது யார் என தனக்குத் தெரியும் என்ற போதிலும் அதற்கு ஆதாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள கோத்தாபய லசந்த கொலையாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்ற போதிலும் எவரும் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அரசாங்கமே பொய் கூறுவதாகவும் கோத்தாபய குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது தந்தையைக் கொலை செய்தவர் யார் என்று அறிய வேண்டுமானால், லசந்தவின் மகள் இலங்கை வந்து தன்னைச் சந்திக்க வேண்டும் எனவும் என்ன நடந்தது என தான் அவருக்கு தெரிவிப்பேன் என்ற போதிலும் அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு தன்னிடம் ஆதாரம் இல்லை எனவும் அதனாலேயே தமது ஆட்சியில் விசாரணையை நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment