கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவிக் கோரிக்கை (காணொளி)

463 0

kili

கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் புலம் பெயர் உறவுகளிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

 
இன்று கிளிநொச்சி சந்தையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியபோதே, கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் புலம் பெயர் உறவுகளிடம் உதவிகளைக் கோரி உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி சந்தை வர்த்தக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அ.யேசுராஜன், செயலாளர் இ.கிருஸ்ணராசா, பொருளாளர் சு.ஜீவராஜ் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் சிலர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்;டு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
அத்துடன் உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக சந்தை வர்த்தக சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறும், தமக்கான உதவிக்கரத்தை நீட்டுவோர் கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத்துடன் நேரடியாகவோ,தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு, சங்கத்தின் கணக்கு இலக்கத்திற்கு உதவுங்கள் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 
இதற்கமைய கிளிநொச்சி வர்த்தக அபிவிருத்திச் சங்கத்தினரின் இலங்கங்களாக 0778666737, 0778114187, 0773830489 ஆகிய இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை வங்கி கிளிநொச்சி கிளையில் உள்ள நடைமுறை கணக்கு இலக்கமான 79718505 ஆகிய இலக்கங்களும் வர்த்தக சங்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.