கொள்ளையர்கள் மூன்று பேர் கைது

314 0

நீர்கொழும்பு பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்து பணம் கொள்ளையிட்ட மூன்று பேரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். 

நிதி உதவிக்காக பணம் சேகரிப்பதாக கூறி சென்று வீடொன்றினுள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கி விட்டு இவர்கள் பணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொச்சிக்கடை மற்றும் கட்டான பிரதேசங்களை சேர்ந்த 32 மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment