சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்ரரத்ன பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சந்ரரத்ன பல்லேகம சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்ததுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராகவும் கடமையாற்றியிருந்தார்.
அத்துடன் 2013- 2015ஆம் ஆண்டு வரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சந்ரரத்ன பல்லேகம நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


