புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய அனைவரும் தயாராக வேண்டும்! – மத்தும பண்டார

19 0

அனைரும் புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டுமென அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு அமைவாக கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும்  என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகலவித நடவடிக்கைகளையும்  முன்னெடுத்து வருவதாகவும் இந்த வருடத்தில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.

ஆறு மாகாணசபைகளுக்கான கால எல்லை நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நிறைவடையவுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. 

அது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலையினை போல ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. 

மாகாணசபைத் தேர்தலை நடத்தவதில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்தும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எதிரணியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

Leave a comment

Your email address will not be published.