சுகாதார அமைச்சின் புதிய இணைப்புச் செயலாளர் நியமனம்

25 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் சுகாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசீம் இந் நியமனத்தை வழங்கியுள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட ஏ.எல்.தவம் அக்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற மாகாண சபை உறுப்பினர் என்ற பெருமையையும்  பெற்றிருந்தார்.

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சிறந்த ஆளுமையுள்ளவராக பார்க்கப்படும் தவம் தனது பல்கலைக்கழக காலத்தில் ஒலுவில் பிரகடணத்தின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.