தனித்து போட்டியிட்டு வெற்றிப் பெறலாம் -ரோஹித

52 0

பொதுஜன  பெரமுன முன்னணியினர் எவருடனும்  கூட்டணியமைத்துதான்   தேர்தலில்  வெற்றிப்   பெற  வேண்டிய    நிலை கிடையாது. தனித்து  போட்டியிட்டே வெற்றியினை பெற  முடியும். இதற்கு இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் வெற்றியே சாட்சி என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி  வேட்பாளர்   தொடர்பில்  தற்போது  தேவையற்ற   வாதப்பிரதிவாதங்கள்  இடம்பெற்று   வருகின்றது.  பொதுஜன  பெரமுன முன்னணியினரின்  சார்பில் வெற்றிப் பெற கூடிய  ஒருவரையே  முன்னாள்  ஜனாதிபதி   மஹிந்த  ராஜபக்ஷ   களமிறக்குவார்.    என்பதில்  எவ்விதி  விட்டுக்  கொடுப்புக்களும்,  மாற்றங்களும்  கிடையாது  .

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  மீண்டும்   ஜனாதிபதி   தேர்தலில்  போட்டியிட போவதில்லை  என்று   ஆரம்பத்திலே  குறிப்பிட்டுள்ளார். தற்போதும் அவர் தானே வேட்பாளராக போட்டியிடுவேன் என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை  . ஆனால் அவரை காரணம் காட்டி அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களே அவரையும்    இக்கட்டான  நிலைக்கு  தள்ளி  விடுகின்றனர்.

  புதியதாக  அமைக்கப்படும்  கூட்டணியில்      ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக  போட்யிட்டால்  தாம்    ஆதரவு  வழங்க  போவதில்லை  என்று   பொதுஜன  பெரமுன  முன்னணியின்  மாகாண  சபை    உறுப்பினர்கள்  உறுதியாக  குறிப்பிட்டுள்ளனர். இது  மாகாண   சபை  உறுப்பினர்களின்   தனிபப்ட்ட     தீர்மானமாகும். இவ்விடயம்   தொடர்பில்  பொதுஜன  பெரமுன  முன்னணியின்   முக்கியத்தரப்பினர்களிடம்   இருந்து  எவ்வித    பதில்களும் கிடைக்கப்  பெறவில்லை. தேர்தல் ஒன்றில் வெற்றிப் பெறுவதையே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.  

   பொதுஜன  பெரமுன  முன்னணி  சுதந்திர  கட்சியுடன்  கூட்டணியமைத்தாலே  இவ்பிரச்சினை   தோற்றம்  பெறும்.   நாங்கள்  கூதந்திர   கட்சியுடன்   கூட்டணி  அமைப்பதற்கு   பிரதான  காரணம்      ஐக்கிய  தேசிய  கட்சிக்கு  எதிராக  செயற்படும்  அனைவரையும்   ஒன்றினைக்கவும்,   இடைக்கால   அரசாங்கத்தை  ஏற்படுத்தி  ஜனாதிபதி    மஹிந்த  ராஜபக்ஷவின் மீது   நம்பிக்கை  வைத்து   பொறுப்புக்களை  ஒப்படைத்தமையின்   ஊடாக      ஏற்பட்ட  நல்லுறவை  பலப்படுத்தவே  தவிர   எங்களின்   பலவீனத்திற்கு  அல்ல  என்பதை  சுதந்திர  கட்சியினர்  புரிந்துக்   கொள்ள   வேண்டும் என்றார்.

Leave a comment

Your email address will not be published.