வெளிநாட்டுப் பிரஜை சடலமாக மீட்பு

302 0

வெலிகமை – கப்பரதொட்ட கடற்பரப்பில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த வெளிநாட்டுப் பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் இன்று முற்பகல் 10.00 மணியளவில்  கப்பரதொட்ட கடற்பரப்பிலிருந்து  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

சுற்றுலா மேற்கொள்வதற்காக இலங்கை வருகை தந்த  மேற்படி வெளிநாட்டுப்பிரஜை  நேற்று  வியாழக்கிழமை  மாலை நான்கு மணியளவில்  தனது  நண்பர்கள் மூவருடன்   கப்பரதொட்ட கடற்பரப்பில் நீராடச்சென்றுள்ளார்.

இந்த சமயத்திலேயே  வெளிநாட்டு பிரஜை  நீரில் மூழ்கிகாணாமல் போயிருந்தார் . அதனை அடுத்து வெலிகமை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபரை தேடும் பணியில்  பொலிசார், மிரிஸ்ஸ  கடற்படைப்பிரிவினர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையிலேயே  காணமல் போயிருந்த வெளிநாட்டுப்பிரஜை  இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்  23 வயதுடைய நோர்வே நாட்டவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

 அத்துடன் , வெளிநாட்டு பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக  மாத்தறை வைததியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


Leave a comment