எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் கூட்டமைப்பின் குடும்ப சொத்தல்ல -செஹான் சேமசிங்க

503 0

எதிர்கட்சி  தலைவர்  அலுவலகம், மற்றும் உத்தியோகப்பூர் வாசஸ்தலம்  ஆகியவற்றை பலவந்தமாக வைத்துக் கொள்ளுவதற்கு அவை ஒன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  குடும்ப  சொத்து  அல்ல எதிர்கட்சி தலைவர்  பதவியை மஹிந்த ராஜபக்ஷ வகிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின்  எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

கூட்டமைப்பின் தலைவர்  எதிர்கட்சி  தலைவர் பதவியில் இருந்து முறையாக விலகிக்கொள்ள வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க  தெரிவித்தார்.

மக்கள் இளைஞர் முன்னணி அலுவலகத்தில்இன்று வெள்ளிக்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில்   கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தின் பிரதான எதிர்கட்சி  தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ  வகிக்க முடியும் என  சபாநாயகர் குறிப்பிட்டதற்கு முரனாகவே கூட்டமைப்பினர்  செயற்பட்டு வருகின்றனர்.

இவ்விடயத்தில்  ஐக்கிய தேசிய கட்சியே இவர்களுக்கு ஆதரவு  வழங்குகின்றனர்.ரணில் விக்ரமசிங்க   பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர்  எவ்வாறு அலரிமாளிகையினை  விட்டு  வெளியேறாமல்,  அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார்.  அதன்  தொடர்ச்சியினையே தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர்  இரா.  சம்பந்தன் இன்று பின்பற்றுகின்றார்.

Leave a comment