கடற்படை பேச்சாளர் திடீர் மாற்றம்

352 0

கடற்படையின் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றிவந்த கமாண்டர் தினேஷ் பண்டாரவுக்கு பதிலாக புதிய கடற்படை பேச்சாளராக லெப்டினென்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக்கொண்டுள்ள இவர் இனிவரும் நாட்களில் கடற்படையின் உத்தியோகபூர்வ பேச்சாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் பேச்சாளராக செயற்பட்டுவந்த கமாண்டர் தினேஷ் பண்டார கடந்த 2018 ஆம் ஆண்டு 31 ஆம் திகதியுடன் தனது பேச்சாளர் பதவிக் காலத்தை நிறுத்திக்கொண்டு, கப்பலொன்றின் பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்று கொண்டுள்ளார். 

இதனையடுத்தே இப்பதவிக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் லெப்டினென்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment