புத்தாண்டு பிறப்பில் 500 பேர் வைத்தியசாலையில்

278 0

புது வருட பிறப்பையடுத்து பல்வேறு சம்பவங்களால் காயமடைந்த சுமார் 500 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் கூறினார். 

பட்டாசு ஒன்றை வாயில் வைத்து எரிய வைத்ததால் காயமடைந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

45 வயதுடைய துருக்கி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

Leave a comment