மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

292 0

மாத்தறை, கபுருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாத்தறை அரச மரக்கூட்டுதாபனத்தில் லொறி ஓட்டுனரின் உதவியாளராக கடமையாற்றும் ஒருவரே 23 வயதுடைய சலன பிரசன்ன எனும் வெலிமடை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்று (31) இரவு குறித்த லொறு ஓட்டுனரின் மூத்த சகோதரனுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை குறித்த நபர் அறையில் இருந்து வெகு நேரமாக வெ ளியில் வராத காரணத்தினால் லொறி ஓட்டுனர் அறையினுல் சென்று பார்வையிட்டுள்ளார். 

இதன்போது குறித்த நபர் அறையில் இருந்த கட்டிலிற்கு அருகில் விழுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரின் கட்டில் முழுமையாக தீக்கிரையாகி இருந்ததாகவும் இதனால் அறையினுல் புகை மூட்டமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மாத்தறை, கொடவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment