மேலதிக கட்டணம் அறவிட்ட 71 பஸ் வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு

23 0

பஸ் கட்டணத்தை விட, மேலதிக கட்டணங்களை அறவிட்ட 71 பஸ் வண்டிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்துடன் மேலதிக கட்டணங்கள் அறவிபடப்படும் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் தேசிய  போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. 

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் கட்டணங்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் நான்கு வீதத்தினால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.