ஐ.தே.க.வின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனவரியில்

1638 13

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் இதன்போது கட்சியில் ஏற்பட கூடிய எதிர்கால மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. 

கடந்த 27 ஆம் திகதியே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போதை நிலைமைகளில் செயற்குழு கூட்டத்தை நடத்துவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல் நிலையின் காரணமாகவே அடுத்த மாதத்தில் நடத்துவதற்க தீர்மானித்துள்ளதுடன் இடம்பெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது 

Leave a comment