பொதுஜன பெரமுனவில் இணைந்த பலர் இன்றைய ஸ்ரீ ல.சு.க.யின் கூட்டத்தில்

5333 47

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற பலர் இன்று (24) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்துக்கு வருகை தந்திருந்ததாகவும், அவர்களை இணைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (24) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அடுத்த வருடம் (2019) தேர்தல் வருடமாக காணப்படும் எனவும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்ததாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி.  குறிப்பிட்டார்.

இன்றைய ஸ்ரீ  ல.சு.க.யின் முக்கிய கூட்டத்துக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் அங்கத்தவர்கள் எவரும் கலந்துகொள்ள வருகை தரவில்லையென ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment