கூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா – அனந்தி சசிதரன்

333 0

ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும்  நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வியொழுப்பியுள்ளார்.

தற்போதைய சமகால அரசியல் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும்அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு ஏன் நீதிமன்றம் செல்லவில்லை.

தமிழ் மக்களுடைய பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருக்கின்றது. நீதிக்காக இன்றைக்கும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்  தமிழ்மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ நிதிக்காக போராடும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் ஐனநாயகத்தை நிலைநாட்டுவததா கூறி ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்றனர். இப்போது நீதியும் கிடைத்து உள்ளதாகவும் கூறுகின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்கள்விடயத்தில் ஏன் அவ்வாறு செயல்படவில்லை.

இன்றைய அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகையினால் கூட்டமைப்பின் வகிபாகம் நிச்சயம் அவர்களது முகத்திரையைக் கிழித்துள்ளதாகவும்  தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதாக எங்கள்  மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எங்களை துரோகிகளாக சித்தரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்கவேண்டு மென்றும் தெரிவித்தார்.

Leave a comment