நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எம்மால் ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது-வீரவன்ச

192 0

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

அவ்வாறு நாட்டைப் பிரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ துணை போயிருந்தால் 113 பேரின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமைந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது. நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியதாலேயே கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது. இவ்வாறு நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எம்மால் ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என்றார்.

Leave a comment