புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தியது குஜராத்

267 0

புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 – 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியினர் வீறு கொண்டு ஆடினர். இதனால் அரியானா அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

இறுதியில், அரியானா அணியை 47 – 37 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.

Leave a comment