மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு கிடைக்கும்- எஸ்.பி.

250 0

நாட்டில் அரசாங்கமாகக் கருதப்படும் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போது, ஆளுங்கட்சி இன்றி சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்றத்தை கூட்டியுள்ளமை சட்டவிரோதமாகும். அதன் காரணமாகவே நாம் இன்றும் பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்துள்ளோம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, எவ்வாறிருப்பினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு விரைவில் கிடைக்கப்பெறும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

நாளை அல்லது, நாளை மறுதினம் உயர் நீதிமன்றத்தினால் சிறந்ததொரு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். இன்றும் (நேற்று) சபாநாயகர் கருஜய சூரிய சட்டவிரோதமாகவே பாராளுமன்றத்தைக் கூட்டியுள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பவற்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் அமைச்சரவையே அரசாங்கமாகக் கருதப்படும் அவ்வாறிருக்ககையில் ஆளுங்கட்சி இன்றி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. அதனாலேனே நாம் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்து வருகின்றோம். பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதாகும்.

Leave a comment