தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள்? – வடிவேல்

391 0

கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதில் பிரதான பங்குவகிப்பது தொழிற்சங்கங்கள் ஆகும். அவ்வாறிருக்கையில், முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் யாருடன் ஒப்பந்தத்தை கைசாத்திடுவார்கள் என கேள்வி எழுப்பிய இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயளாலர் வடிவேல் சுரேஷ், முதலாளிமார் சம்மேளனத்தின் இவ்வகையான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கங்கள் ஒரு போதும் இடமளிக்காது எனவும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுடன் இனி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் பிரதான தொழிற்சங்கம் என்ற ரீதியில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டி சம்பள உயர்வை மேற்கொள்ள முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டால் நீதிமன்றத்திற்கு சென்று சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதற்கான தீர்வினைக் காண முடியும். நாம் கோரும் சம்பள உயர்வையும் இதனையும் தொடர்புபடுத்த முடியாது.

Leave a comment