சிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

252 0

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுனில் சாந்த என்ற பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் மீமுரே பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment