ஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு

313 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த 9 ஆம் திகதி  2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக கூறப்படும் கோரிக்கைக்கு எதிராக நேற்று நகர்த்தல் பத்திரம் ஊடாக மனுவொன்று உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த நகர்த்தல் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு பதிலாக சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த நகர்த்தல் பத்திரத்தின் பொறுப்புக் கூறத்தக்க தரப்புக்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a comment