தற்காலிக தடையுத்தரவால் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி-பந்துல

361 0

இடைக்கால அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்தமையின் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் இல்லாத காரணத்தினால் வடக்கின் பாதுகாப்பினை பலப்படுத்த அமைதிகாக்கும் படையினரை பணிக்கு அமர்த்துமாறு எதிர்தரப்பினர்  குறிப்பிட்டுள்ளமையானது ஏற்றுக்கொள்ள முடியாது.  நாட்டின் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது. இடைக்கால அரசாங்கத்தில்  வடக்கு  கிழக்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு  வருகின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment