பதுளையில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரு பொலிஸார் பலியானதுடன் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய w,m. வீரசேன என்ற 51 வயதுடைய பொலிஸ் அதிகாரியும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிய h.m.. ஜனககுமார என்ற 33 வயதுடைய பொலிஸ் அதிகாரியுமே குறித்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
இவ் இருவரின் சடலங்கள் பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பதுளையின் ஸ்பிரிங்வெலி என்ற இடத்திற்கு விசாரணை ஒன்றுக்கு சென்ற w.m/வீரசேன என்ற பொலிஸ் அதிகாரி விசாரணையின் அறிக்கைகளுடன் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் எதிர் திசையிலிருந்து வந்த இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி பலியானார்.
இது தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு இ.போ.ச சாரதியை கைது செய்துள்ளனர்.
பதுளையில் இடம்பெற்ற திருமண நிகழ்விற்கு சென்று விட்டு நுவரெலியாவிற்கு தமது காரில் திரும்பும் போது பதுளை நுழைவாயிலில் அமைந்துள்ள வர்ண சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான காரை செலுத்திய ா.அ..ஜனக்ககுமார என்ற பொலிஸ் அதிகாரி ஸ்தலத்திலேயே பலியானதுடன். அக் காரில் பயணித்த மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மேலும் மூவர் பலத்த காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை பொலிஸார் மேற்படி இருவேறு விபத்துக்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

