பரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

264 0

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சில தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் குறித்த ஆசிரியை சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குறித்த ஆசிரியை சம்பந்தமாக பரீட்சைகள் திணைக்களத்தாலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் சம்பந்தமாக பரீட்சைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் மாணவன் ஒருவனுக்கு விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவரும் மாணவனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment