க.பொ.த பரீட்சையில் கைப்பேசி பயன்படுத்தி கைதான இருவருக்கும் பிணை

300 0

சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது , ஒருவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் அப்பிரதேசத்தின் பாடசாலையொன்றில் பணிபுரியும் நிலையில் , 20 வயதுடைய தனியார் விண்ணப்பதாரரான மாணவர் நான்காவது தடவையாக ஆங்கில பாடத்திற்காக இவ்வாறு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment