ரணில் அல்லாத ஒருவரை ஐ.தே.க. பிரேரித்தால் அரசியல் நெருக்கடி தீரும்- சேமசிங்க

11580 132

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்தும் கொண்டு செல்லவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக கூறும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏன் ? ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரிக்க முடியாதுள்ளது. ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த ஒருவரை தெரிவு செய்து ஜனாதிபதிக்கு அறிவித்தால், பிரதமர் நியமனம் இடம்பெற்று நெருக்கடிக்கு தீர்வும் கிடைக்கும்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அதனைச் செய்யாது பிரச்சினையை இழுத்தடித்து வருகின்றது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment