ரணில் மீது ஐ. தே.க. உறுப்பினர்களுக்கு விருப்பமில்லை -மஹிந்த யாப்பா

245 0

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதில் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றதாக மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர்  ரணில்  விக்ரமசிங்கவிற்கு மீண்டும்  பிரதமர்  பதவியை  வழங்க ஐக்கிய தேசிய  கட்சியின் உறுப்பினர்கள் உட்பட , அவர்களுக்கு தற்போது ஆதரவாக  செயற்படும்  கட்சிகளுக்கும் விருப்பமில்லை என்ற காரணத்தினாலே  அவர்கள்  நேற்று   கொண்டு வரவிருந்த  பிரேரனையை பிற்போட்டனர்  என பாரர்ளுமன்ற உறுப்பினர் மஹிந்த  யாப்பா அபேகுணவர்தன தெரிவித்தார்.

பிரதமர்  பதவி  தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்  தற்போது  பாரிய  கருத்து  முரண்பாடுகள்  காணப்படுகின்றது.ஒரு தரப்பினர்  ரணிலை மீண்டும்  பிரதமராக்க கூடாது என்ற  நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தற்போதைய அரசியல்  நெருக்கடிகளுக்கு  தீர்வு  காண நாங்கள் எந்நேரமும் தயாராகவே  உள்ளோம்.

ஆனால் ஐக்கிய தேசிய  கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ்  தேசிய கூட்டமைப்பினரும்  தான்  தேர்தலை கண்டு  பின்வாங்குகின்றனர்.

இதன்  காரணமாகவே இடைக்கால  அரசாங்கத்திற்கு  தொடர்ந்து  தடைகளை ஏற்படுத்தி  வருகின்றனர்.

Leave a comment