பகிஷ்கரிப்பு தீர்மானம் இருக்கையில் குமார வெல்கம பாராளுமன்றம் வருகை

258 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தரப்புக்களைச் சேர்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய (05) பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிக்க தீர்மானித்திருந்த போதிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தனியாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

தனது வேறு ஒரு நடவடிக்கைக்காகவே  பாராளுமன்றத்துக்கு சமூகமளித்ததாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தமை சர்ச்சைக்குரிய ஒன்றாகும் எனவும் தான் ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் செல்ல மாட்டேன் எனவும் தெரிவித்து வரும் ஒருவரே குமார வெல்கம ஆவார்.

இவர் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே தகுதியானவர் எனவும், கோட்டாபய ராஜபக்ஷ பொருத்தமற்றவர் எனவும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்து வரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய பாராளுமன்ற வருகை மஹிந்த அரசாங்கத்துக்கான எதிர்ப்பைக் காட்டும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Leave a comment