காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் முன்னாள் போராளி தற்கொலை!

22 0

போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் போரின்போது காயங்களுக்கு உள்ளானவர். இவரது உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த 15 திகதி முன்னால் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்றபோதும் உடலில் ஏற்பட்ட வலி நீங்கவில்லை என்றும் வீடு திரும்பிய நிலையில் தனது வீட்டில் இன்று புதன்கிழமை மீண்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிகவும் வறுமையான நிலையில் குறித்த முன்னாள் போராளியின் குடும்பம் காணப்படுவதாகவும் இவரது தற்கொலை குடும்பத்தை மாத்திரமின்றி அப் பகுதியையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Post

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள்?

Posted by - December 13, 2016 0
இறுதி யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு…

இறுதிக் கட்டத்தில் எட்கா உடன்படிக்கை

Posted by - September 28, 2016 0
எட்கா உடன்படிக்கைக்கு உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய…

அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது – யாழில் பிரதமர் தெரிவிப்பு

Posted by - September 17, 2016 0
மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான…

யாழ்.பல்கலைக்கழக மோதல்- தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - July 27, 2016 0
யாழ். பல்கலைக்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த…

வவுனியாவில் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

Posted by - August 20, 2018 0
வவுனியா  பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா…

Leave a comment

Your email address will not be published.