வடக்கு முதல்வர் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகிறார் – ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு

332 0

e8e19bb92f4dd7a4213590cc2f16392f_1471912422-bவடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் கனவு வடக்கின் அபிவிருத்தியாகும்.

எனினும், முதலமைச்சர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் நிசாந்த சிறி வர்னசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளதாக ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் அதனை குறிப்பிட்டார்.

விக்னேஸ்வரனின் கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து தெற்கு இனவாதிகளுக்க சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விக்னேஸ்வரன் தமது கருத்தை மீளபெற்றுக்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு என்ற போர்வையில் நாடு பிரிக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இது போன்ற கருத்துக்களை தென்மாகாண முதலமைச்சரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ வெளியிட்டிருந்தால் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக தெரிவித்து மறுநாள் ரகசிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

ஆனால் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக இதுவரை எந்தவித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.