அசுத்த காற்று சுவாசம் – 60 லட்சம் பேர் மரணம்

336 0

air-pollution-4அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு உலகளாவிய ரீதியாக 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

10 ல் ஒன்பது பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆய்வு உலகில் உள்ள சுமார் மூவாயிரம் நகரங்களில் நடத்தப்பட்டது.
இதில் 92 சதவீதமானவர்கள் அசுத்தமான சுற்று சூழலில் வாழ்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவிலான வாகன போக்குவரத்து, கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தமின்மை காரணமாகவே அசுத்தமான காற்று சுவாசிக்கப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.