மக்களுக்காக தலைமைத்துவத்தை சஜித் ஏற்பார் – தலதா

391 0

நாட்டு மக்களுக்காக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதுடன், எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவரே தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

திஸ்ஸமகாராமையில் இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நீதிக்கான யாத்திரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதன் மூலம் மீண்டும் ஜனாபதியாக வேண்டும் என்ற மைத்திரிபால சிறிசேனவின் கனவையும், வழக்குகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற மஹிந்த ராஜபக்ஷவினுடைய எதிர்பார்ப்பையும் ஐ.தே.க முறியடிக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment