எதிர் தரப்புக்கு அதிகாரமில்லை – கெஹெலிய

354 0

அரச நிதியினை கட்டுப்படுத்துமாறு குறிப்பிடும் அதிகாரம் எதிர் தரப்பினருக்கு கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நிதி நிலைமை தொடர்பில் ஒரு பிரேரணை கொண்டுவர வேண்டுமாயின் அமைச்சரவையின் கலந்துரையாடல்களின் பின்னரே நிதியமைச்சினால் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் எதிர் தரப்பினர் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு புறம்பாக செயற்பட்டு பிரேரணைகளை தாங்கேள நிறைவேற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டடை  அரசியலமைப்பிற்கு முரணா, அல்லது முரணற்றதா என்ற  விசாரனை  உயர்நீதிமன்றத்தில்  இடம் பெற்று வருகின்றது.

இந்த கேள்விக்கான பதில் கிடைத்த பின்னரே ஒரு தீர்வு  காணமுடியும்.   பாராளுமன்றம் தொடர்பிலான ஒரு விவாதம் இடம்பெறுகின்ற வேளையில் ஐக்கிய தேசிய கட்சியினரால் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற விடயங்கள் யாவும் பயனற்றது எனவும் தெரிவித்தார்.

Leave a comment