பாதாள உலக முக்கிய புள்ளிகள் இருவர் கைது

4261 0

கொழும்பு நகரில் பாதாள உலக குழுவாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரதான புள்ளிகள் இருவர் இன்று (01) நண்பகல் குருநாகலை வெஹெர பிரதேசத்தில் மறைந்திருந்தபோது கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இருவருடனும் ரி. 56 ரக துப்பாக்கி ஒன்றையும் அப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள்  வீடொன்றை வாடகைக்கு எடுத்து அதில் தலைமறைவாகியிருந்து வந்துள்ளனர். வெஹெரவிலுள்ள இராணுவ முகாம் மற்றும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க வனரத்னவின் வீடு என்பவற்றுக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே இவர்கள் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment