திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

280 0

மோட்டார் சைக்கிள்களையும் முச்சக்கரவண்டியைம் திருடிய இரு இளைஞர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களையும் முச்சக்கரவண்டிகளையும் திருடி அவற்றை பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்த சந்தேகநபர்களை நவ குருந்துவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான  மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு எடுத்து செல்ல முற்பட்ட போது குருந்துவத்த போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் அதிகாரி குறித்த மோட்டார் வாகனத்தை நிறுத்தக் கோரியபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றமையால் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியின் எஞ்சினை கொழும்பிற்கு விற்பனை செய்தபோதே பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது குறித்த முச்சக்கரவண்டி பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான நபரொருவரும் 18 வயதான நபரொருவரும் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரும் பல திருட்டு சம்பங்களுக்கு சூத்தரதாரர்களாக இருந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர்கள் என மேலதிக விசாரணைகளின் மூலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் சி.சி.டி.வி கெமராவை லேசர் மூலமாக மூடிவிட்டு திருடியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment