குறித்த 13 சிறைக் கைதிகளில் 12 பேர் வெலிக்கடை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, மற்றுமொரு கைதி வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

இந்நிலையில் மாத்தறை, காலி, மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் 560 க்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களும் இம் முறை கல்விப்பொதுத்தர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.