முன்னாள் கடற்படைத் தளபதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றம்

302 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டு எதிர் வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று ரவீந்திர குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தால் கிடைக்கப் பெற்ற உத்தரவிற்கமையவும் சந்தேக நபரின் உயிராபத்தை கருத்தில் கொண்டும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பின் புற நகர் பகுதிகளில் கடந்த 2008 , 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான சாந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக பாதுகாப்பு வழங்கியதாக பாகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment