இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

878 0

யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவில்,
இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் உள்ள அனைத்து ஈழத்தமிழர் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களையும் ஒருங்கிணைத்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக, அன்னை தமிழ்ப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

25.11.2018ல் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

27.11.2018ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் அருட்தந்தை: ஜேம்ஸ் பாரத ரத்னா அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைக்க , மாவீரர்களுக்கான பொதுச்சுடரை 30.01.1990ல் வீரச்சாவடைந்த மாவீரர், வீரவேங்கை பாஞ்சாலன் (சற்குணம் மாதவன்) அர்களின் தாயார் மல்லிகாதேவி அவர்கள் ஏற்றிவைத்தார்.

நலன்புரி நிலையங்களில் வாழும் மாவீரர் குடும்ப உறவுகள் வணக்கம் செலுத்த வாய்ப்பாக பிரத்தியேகமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்லறைத் தோற்றங்கள் தாயக மண்ணில் நிகழ்ந்த உணர்வலைகளை மக்கள் மனதில் ஏற்படுத்தி இருந்தது.

Leave a comment