சதுரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்!

376 0

“ஜனாதிபதி தந்தை” 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். 

 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்த போது அருகில் அமர்ந்திருந்த   துஷார இந்துனில் எம்.பி ஆபாச புத்தகம் ஒன்றினை வாசித்துக்கொண்டுள்ளார் என கூறினார்.

இதன்போது எழுந்து பதில் கூறிய துஷார எம்.பி:- நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை, சதுரிகா சிறிசேன எழுதிய “ஜனாதிபதி தந்தை ” என்ற புத்தகத்தையே வாசித்துக்கொண்டுள்ளேன். எனினும் இதில் சதுரிகா சிறிசேன  ஜனாதிபதியின் பெயரை  41 இடங்களில்  துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனை தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதனையே முஜிபூர் எம்.பி ஆபாசப் புத்தகம் படிப்பதாக கூறுகின்றார் எனக் குறிப்பிட்டார்.

Leave a comment