ஜனாதிபதி அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றார்!

362 0

அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார் என சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுஜீவ சேனசிங்க எம்.பி, மேலும் கூறுகையில்,

இன்று ரூபாவின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடன் சுமை அதிகரித்து வருகின்றது. இதனை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. ஆகவே சட்டவிரோத பிரதமர் ஒன்றுவரை வைத்துகொண்டு ஜனாதிபதி ஆட்சி செய்து வருகின்றார். இன்றும் நாம் எமது பெரும்பான்மையை நிருபித்துவிட்டோம்.

எனவே ஜனாதிபதி இப்போதே அரசியல் அமைப்பினை மீறி நாட்டினை நாசமாக்கிவிட்டார். ஆனால் இப்போதும் காலம் உள்ளது, ஜனாதிபதி விட்ட தவறை சரிசெய்ய ஒரு வாய்ப்பு உள்ளது. காலம் கடந்துவிட்டது. ஆனால் காலம் கடந்தேனும் அவர் மக்களுக்காக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Leave a comment