வடக்கு முதல்வரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது-ரஞ்சன் ராநாமயக்க

357 0

ranjan-ramanayakeவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புர பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், விக்னேஸ்வரனுக்கு தமது கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு பேரணியாக செல்ல முடியும். யார் அவற்றை வழங்குவது. அதனை வழங்குவதற்கான உரிமை மத்திய அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. ஆறுபத்து இரண்டரை லட்சம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்குமே அதற்கான உரிமை காணப்படுகின்றது. யாருக்கு வேண்டுமானாலும், ஏதை வேண்டுமானாலும் கேட்க முடியும். எனினும், இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது விருப்பங்களை வேறொருவருக்கு வழங்கியுள்ளனர்.

 

நான் அறிந்த விதத்தில் விக்னேஸ்வரனுக்கு ஒன்றரை லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. ஒன்றரை லட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்ட நபர், ஆறுபத்து இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்ற ஒரு நபரிடம் சவால் விடுகின்றமை குறித்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 500 அல்லது 600 உணவு பொதிகளை வழங்கினால் அவ்வாறு இல்லையென்றால், போதைப்பொருள் பக்கட்களை வழங்கினால் கோஷங்களை எழுப்புவதற்கு வேண்டியளவு மக்கள் வருகைத் தருவார்கள். சிறிகொத்த என்ற பகுதி எனக்கு வேண்டும் என கோரி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை என்னாலும் நடாத்த முடியும்.

 

யாராலும் அதனை நிறுத்த முடியாது. அது எனது உரிமை. நான் அவ்வாறு சென்றாலும், இந்த காணியை யாரும் எனக்கு வழங்க போவதில்லை அல்லவா? அந்த பகுதியில் பௌத்த கலாசாரத்தையும், பௌத்த விகாரைகளையும் வேண்டாம் என்று சொல்வதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது. அந்த இடத்தில் மாத்திரம் அவருடன் எமக்கு முரண்பாடு காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.