இன்று கூடுகிறது பாராளுமன்றம்

303 0

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­ம­னத்தில் சர்ச்சை நிலைமை உரு­வா­கி­யுள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது.

ஆளும் கட்சிக்கா அல்­லது பெரும்­பான்மைக் கட்­சிக்கா அதிக அங்­கத்­துவம் வழங்­க­ப்பட வேண்டும் என்ற சர்ச்சை இன்று  சபை அமர்­வு­களின் போது ஏற்­படும்  என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இன்று கூடும் பாரா­ளு­மன்ற கூட்­டத்தின் போது பிர­தான விட­ய­மாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­மனம் இடம்­பெ­ற­வுள்­ளது. கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் கூடி­ய­போது அன்­றைய தினம் காலை கூடிய கட்சி தலைவர் கூட்ட  தீர்­மானம் படி பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு­வுக்­கான கட்சி எம்.பி. க்களின்   பெயர்­களை பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு பரிந்­து­ரைக்­கு­மாறு  அறி­வு­றுத்தல் வழங்­கினார்.

அதற்­க­மைய பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சிகள் தமது உறுப்­பி­னர்­களின் பெயர்­களை பரிந்­துரை செய்­துள்­ளது.

இதில் ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் அமைச்­சர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, எஸ்.பி. திசா­நா­யக, மஹிந்த சம­ர­சிங்க, நிமல் சிறி­பால டி சில்வா, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலங்க சும­தி­பால ஆகி­யோரின் பெயர்கள்  பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

எதிர்க்­கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு­வரை ( மாவை சேனா­தி­ராஜா), மக்கள் விடு­தலை முன்­னணி சார்பில் இருவர் (விஜித ஹேரத், நலிந்த ஜய­திஸ்ஸ )வின் பெயர்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ளது.

அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதேவேளை இன்றும் பாராளுமன்றத்தின் பார்வையாளர்கள் கலரி மூடப்பட்டுள்ளதாக  படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment