அரச வைத்தியசாலைகளில் 40 வகையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு- ராஜித

248 0

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பிரதான 10 மருந்து வகைகள் உட்பட 40 விதமான மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி கோரும் சட்ட மூலம் நிறைவேற்றப்படும் வரையில், அமைச்சுக்களிடத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரச மருந்தகர் சங்கம் முன்னாள் அமைச்சரின் கருத்தை மறுத்துள்ளார். தற்பொழுது அரச வைத்தியசாலைகளில் போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment