நாளை பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் அனுமதி

271 0

பாராளுமன்றத்தின் நாளைய (23) அமர்வின் போது பொது மக்கள் பார்வையாளர்கள் பகுதியும், தூதுவர்களுக்கான பகுதியும் மூடப்படும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை பொது மக்கள் பார்வை பகுதியை மூடிவிடுவதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார். ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது நாளை 23 ஆம் திகதி வரை சபை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment